கிளிநொச்சி பளைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் வீட்டுக் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது அடையாளம் காணப்பட்ட 40 எறிகணைகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய செவ்வாய்க்கிழமை (14) விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒருவர் தங்களது காணியில் பனங்கிழங்கு தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக மண்ணை வெட்டிய போது வெடிபொருட்கள் காணப்பட்டன.
இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவது தொடர்பில் பளைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக குறித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட 40 மோட்டார் எறிக்கணைகள் மீட்கப்பட்டுள்ளன.
Leave a comment