Home தாயகச் செய்திகள் காற்றாலை அமைக்கும் ஆய்வுக்குழுவை வெளியேற்றிய பேசாலை மக்கள்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

காற்றாலை அமைக்கும் ஆய்வுக்குழுவை வெளியேற்றிய பேசாலை மக்கள்!

Share
Share

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை தெற்கு கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (6) மாலை காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க குழு ஒன்று வருகை தந்த நிலையில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த குழு அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.

பேசாலை கிராமத்திற்கு உட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்களுடன் குழு ஒன்று வருகை தந்ததை அறிந்து கொண்ட பிரதேச மக்கள் குறித்த பகுதிக்குச் சென்று வருகை தந்த குழுவினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

இதன் போது பேசாலை பொலிஸாரும் அவ்விடத்திற்கு சென்ற நிலையில் அங்கு பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காற்றாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க இயந்திரங்கள் ஏற்றி வந்த டிராக்டர் இயந்திரத்தை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து வந்த குழுவினர் அவ்விடத்தில் இருந்து பின்வாங்கிச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...