Home தென்னிலங்கைச் செய்திகள் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும்தரப்புடன் எங்களுக்கு நட்புறவு கிடையாது! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும்தரப்புடன் எங்களுக்கு நட்புறவு கிடையாது! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

Share
Share

“காசாவில் அரங்கேறும் இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீது குண்டுகளைப் போட்டு, படுகொலையில் ஈடுபடும் அரச பயங்கரவாத கலாசாரம் முடிவுக்கு வரும் வரை, அந்த தரப்புடன் எமக்கு நட்புறவு கிடையாது. சங்கமும் கிடையாது. சங்கமும் அமையாது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இஸ்ரேல் – இலங்கை நட்புறவு சங்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புக் கோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார்.

இந்நிலையிலேயே சஜித் மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நாம் முன்னிற்கின்றோம். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் என்பன சமரசத்துடன் செயற்பட வேண்டும் என்பது எமது கொள்கை.

பாலஸ்தீனமானது இன்று இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகின்றது.

காசாவில் இன்று இனப்படுகொலை நடக்கின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

வைத்தியசாலைகளுக்குக் குண்டுகளைப் போட்டு, படுகொலையில் ஈடுபடும் அரச பயங்கரவாத கலாசாரம் முடிவுக்கு வரும் வரை, அந்தத்  தரப்புடன் எமக்கு நட்புறவு கிடையாது.

சங்கமும் கிடையாது. இது விடயத்தில் நாம் தெளிவாக இருக்கின்றோம். இதுதான் எமது கொள்கை – நிலைப்பாடு. எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியமாட்டோம். அழுத்தங்களால் எமது நிலைப்பாடு மாறப்போவதும் இல்லை.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இறுதிப்போர் விவகாரம்; இலங்கை அரசு மீது மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

அரச படைகளுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகால உள்நாட்டுப்போர் தொடர்பான சர்வதேச குற்றங்களை, நம்பகத்தன்மையுடன்...

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...