கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவர் தனது இரவு நேரக் கடமையை முடித்துக் கொண்டு இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், மருதமுனை மக்கள் மண்டபம் முன்பாக நேர் எதிரே வந்த இ.போ.ச. பஸ் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானபோது அதே இடத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
2001ஆம் ஆண்டு கல்முனை மாநகர சபையில் காவலாளியாக நிரந்தர நியமனம் பெற்ற டேவிட் பாஸ்கரன், சுமார் 24 வருட சேவையைப் பூர்த்தி செய்துள்ளார். கடமையில் பொறுப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு மிக்கவராகக் காணப்பட்ட இவர் கல்முனை மாநகர சபையின் சிறந்த ஊழியர் என்ற பாராட்டையும் பெற்றுள்ளார்.
Leave a comment