Home தாயகச் செய்திகள் கனகராயன்குளத்தில் பெண் மீது மோதிய வாகனம்; தப்பித்த சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கனகராயன்குளத்தில் பெண் மீது மோதிய வாகனம்; தப்பித்த சந்தேகநபர்கள் இருவர் சிக்கினர்!

Share
Share

கனகராயன்குளம் பகுதியில் பெண் ஒருவர் மீது மோதி தப்பிச்சென்ற வாகனம் வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த குடும்பபெண் ஒருவர் கடந்த 16ஆம் திகதி இரவு கணவருடன் ஏற்பட்ட முரன்பாட்டை தொடர்ந்து கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க சென்றுள்ளார்.

இதன்போது A9 வீதியில் வைத்து வாகனம் ஒன்று அவரை மோதியதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்தபகுதியை சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச்சென்றிருந்ததுடன், இது தொடர்பாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தையும் அதன் சாரதி,மற்றும் உரிமையாளர் ஆகியோர் விசுவமடு பகுதியில் வைத்து வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

வாகனத்தின் நிறம் உட்பட ஏனைய அமைப்புக்களை மாற்றியமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக்க மற்றும் பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...