Home தாயகச் செய்திகள் கதவடைப்புப் போராட்டம்; வடக்கில் இயல்பு நிலை! கிழக்கில் இயல்பு நிலை பாதிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கதவடைப்புப் போராட்டம்; வடக்கில் இயல்பு நிலை! கிழக்கில் இயல்பு நிலை பாதிப்பு!

Share
Share

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி தமிழரசு கட்சியினால், பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வடக்கில் சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும், பெருமளவான இடங்களில் இயல்பு நிலை சுமுகமாக காணப்பட்டது.

முத்தையன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், அதனால் இராணுவத்தினரை வெளியற்றுமாறு கோரி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால், 18ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.

கதவடைப்பு போராட்டத்திற்கு தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என வர்த்தக சங்கங்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொது அமைப்புகள் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தன.

இந்நிலையில் திங்கட்கிழமை (18) காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, வெருகல், மூதூர் கிழக்கு, புல்மோட்டை பிரதேசங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. திருகோணமலையில் பாடசாலைகளும் ஸ்தம்பித்ததுடன் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி காணப்பட்டது.

இதேவேளை திருகோணமலையில் மத்திய பொதுச்சந்தை, மத்திய பேரூந்து நிலையம் , வங்கிகள், நிதிநிறுவனங்கள், கூட்டுறவு கடைகள், அரச நிறுவனங்கள் வழமை போன்று இயக்குகின்றன.

களுவாஞ்சிக்குடி பகுதியில் பொதுச்சந்தை மற்றும் வர்த்தக நிலையங்கள் திங்கட்கிழமை (18) முற்றாக மூடப்பட்டுள்ளன.

களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதி மற்றும் பிரதான வீதியை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள், என்பன பூட்டப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் பெரிய நீலாவணை , பாண்டிருப்பு , சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை, காரைதீவு, சம்மாந்துறை, மல்வத்தை ,நாவிதன்வெளி ,மத்தியமுகாம், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில், தம்பிலுவில், கோமாரி, தம்பட்டை ,பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டிருந்தன.

இருந்த போதிலும் பொதுப்போக்குவரத்து வழமை போன்று இப்பகுதியில் நடைபெற்றதை அவதானிக்க முடிந்தது. இது தவிர தனியார் அரச வங்கிகள் வழமை போன்று இயங்கியதுடன் தனியார் நிறுவனங்கள் அரச திணைக்களங்களும் மக்கள் சேவைக்காக திறக்கப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளர்களுக்கு பெரும் சிரமம்!

கொடுப்பனவுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை காலை 8...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள நிர்மாணிக்க அடிக்கல் நாட்டல்!

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. சர்வமத தலைவர்களின் ஆசியுடன்...

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஆவணம் தயாரிக்க இணக்கம்!

தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஓர் ஆவணத்தை இலங்கை தமிழ் அரசு கட்சியும் ஜனநாயக தமிழ்த்...