இலங்கையில் இருந்து படகு வழியாக தமிழகத்துக்குள் புகுந்த சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவரையும் இந்தியா உடனடியாகவே நாடு கடத்தியது.
இலங்கையில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் படகு மூலம் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் தமிழகத்துக்குச் சென்றிருந்தனர்.
மன்னார் – பேசாலையில் இருந்து படகு மூலம் மூன்று நபர்கள் இந்தியாவின் மணல்தீடையில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தமிழகப் பொலிஸார் மேற்படி மூவரையும் மீட்டிருந்தனர்.
இதனையடுத்து தமிழகப் பொலிஸார் மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியதன் அடிப்படையில் ஒருவர் முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகத்தர் எனவும், ஏனைய இருவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் எனவும் கண்டறியப்பட்டிருந்தனர்.
இவர்கள் மூவரும் இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதான தகவலும் தமிழகப் பொலிஸாருக்குக் கிடைத்திருந்தது..
இவற்றின் அடிப்படையில் மேற்படி மூவரும் நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
Leave a comment