வவுனியா, ஓமந்தை பகுதியில் பொதுமகன் ஒருவர் மீது இராணுவத்தினர் பெருமளவானோர் சேர்த்து தாக்குதல் நடத்தியதால் பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தை கிராம அமைப்புகளின் முக்கிய பதவிகளில் உள்ளவரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராமத்தில் கொள்ளைச்சம்பவங்கள் இடம்
பெறுவதால் அக் கிராமங்களில் புதிதாக நடமாடுபவர்களின் அடையாள அட்டையை கிராம அமைப்புகளின் உறுப்பினர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
அந்த வகையில் புதிதாக நடமாடிய ஒருவரை குறித்த பொதுமகன் வழிமறித்து அவரின்
அடையாள அட்டையை காட்டுமாறு கோரியுள்ளார்.
எனினும் அவர் தான் இராணும் என தெரிவித்து அடையாள அட்டையை
காட்ட மறுத்து சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் குறித்த பொதுமகன் நேற்று முன்தினம் மாலை வயல் காவலுக்காக சென்ற போது கொம்புவைத்தகுளம் இராணுவ முகாம் முன்பாக வழிமறித்த சிவில் உடை தரித்த 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொது மகன் மீது தாக்குதல் மேற் கொண்ட பின்னர் அவரை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளனர்.
இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் குறித்த பொதுமகன் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a comment