Home தென்னிலங்கைச் செய்திகள் ஒரு புறம் கொலை! மறுபுறம் மிரட்டல்!! – அரசைக் கடுமையாகச் சாடுகின்றார் சஜித்
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஒரு புறம் கொலை! மறுபுறம் மிரட்டல்!! – அரசைக் கடுமையாகச் சாடுகின்றார் சஜித்

Share
Share

“நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் கொலை செய்யும் கலாச்சாரம் தொடர்ந்தும் வியாபித்து வருகின்றது. இந்தச் சூழ்நிலையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், அரசை நேர்மறையாக விமர்சிக்கும் தரப்பினரைக் கூட அச்சுறுத்தும் திட்டம் ஒன்று சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பை தக்சலாவா என்ற யூடியூப் சேனலை நடத்தும் இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் இலக்கத் தகடு இல்லாத மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு நபர்கள் வந்த சம்பவம் இதற்குக் கிட்டிய சம்பவமாகக் காணப்படுகின்றது. இந்தச் சூழ்நிலையில், சிவில் குடிமக்கள், ஊடகத்துறையில் உள்ளவர்கள் மற்றும் சமூக ஊடக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் பாதுகாப்பின்மை உணர்வு நிலவுகின்றது.”

  • இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று ஊடகங்களுக்கு விசேட கூற்றை முன்வைத்து தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போதைய ஆளும் தரப்பினர் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது மேசைகள் மற்றும் நாற்காலிகளைக் கொண்டு வாருங்கள், தேசிய பாதுகாப்பு குறித்த டியூசன் வகுப்புகளை எடுக்கின்றோம் எனப் பிரஸ்தாபித்திருந்தனர். அப்போது அவ்வாறு சொன்ன இந்த அரசியல் கட்சி நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைக் கலாச்சாரம் நகரம் நகரமாக வியாபித்து வருகின்றன. சமூக ஊடக ஆர்வலர்களுக்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்கள், நாட்டின் அரசமைப்பின் உச்ச சட்டமான மனித வாழ்வுரிமையை மீறும் செயலாக அமைந்து காணப்படுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும். இதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இராஜ் வீரரத்ன மற்றும் மிலிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் வீடுகளுக்கு அருகில் வருகை தந்த, இந்த அடையாளம் தெரியாத சைக்கிள் ஓட்டுநர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரசு செய்யும் நல்ல விடயங்களைப் பாராட்டவும், தவறான விடயங்களை விமர்சிக்கவும் சகல குடிமக்களுக்கும் உரிமை காணப்படுகின்றது. அரசின் நடவடிக்கைகளில் எது சரி எது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவது 220 இலட்சம் மக்களினதும் பொறுப்பாகும். இந்த உரிமை மக்களுக்குச் சொந்தமான உரிமையானபடியால், அரசுக்கோ அல்லது குண்டர்களுக்கோ இதனைப் பறிக்க முடியாது.

சமூகத்தை அச்சுறுத்தி வரும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முறியடிக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக எங்களால் பெற்றுத் தர முடியுமான அதிகபட்ச பக்க பலத்தை பெற்றுத் தருவோம்.

அரசால் செவிமெடுக்க முடியாத விடயங்கள் யூடியூப் அலைவரிசைகளில் செல்லப்படும் போது, அவ்வாறு விடங்களை முன்வைப்பவர்களை அச்சுறுத்துவதற்குப் பதிலாக, அரசின் தவறுகளைச் சரி செய்து கொண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பணியையே முன்னெடுக்க வேண்டும்.

சமூக ஊடகங்களிலும் சுதந்திர ஊடகங்களிலும் உண்மையைப் பேசும் ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி என்றும் முன்னிற்கும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிரதமர் பதவி விலகப்போவதில்லை; அரசாங்கம் அறிவிப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்த சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை. எனவே விமல் வீரவன்ச...

அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த மக்களுக்கு 50,000 கோடி ரூபா ஒதுக்கீடு!

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் வாழ்க்கையை முன்னெப்போதையும் விட சிறந்த நிலைக்கு மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கத்திற்கு திறன்...

மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நீதிமன்றங்களிலிருந்து மீளப்பெறப்பட்ட 65 வழக்குகள், தற்போதையஅரசாங்கத்தினால்...

இந்த அரசாங்கத்தில் லசந்த கொலைக்கு நீதி கிடைக்காவிடின் கிடைக்காது – ஐ.ம.சக்தி எம்பி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. படுகொலை செய்யப்பட்ட லசந்த...