இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாயாகும்.
மேலும், ஒக்டென் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாகும்.
Leave a comment