Home எம்மைப்பற்றி..

எம்மைப்பற்றி..

இலங்கை மீதான மேலைத்தேய படையெடுப்புக்களால் கபளீகரம் செய்யப்பட்ட தமிழர்களின் பூர்வீக ஆட்சி அதிகாரங்கள் கைமாறி தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் வாழ்வியல் இருப்புக் கேள்விக்குறியாக்கப்பட்டது. அதன் தொடராக இன்றுவரை நீளும் தமிழர்களுக்கு எதிரான அநீதிகளால் தமிழர்களில் பல இலட்சம் பேர் புலம்பெயர்ந்து “ஈழத்து ஏதிலிகள்” எனும் அடைமொழியுடன் பல நாடுகளிலும் பரந்து வாழ்கிறார்கள்.

ஈழப்போரின் போது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பின் குறியீடாக கனடாவிற்கு ஈழத்து ஏதிலிகளைச் சுமந்து பல சவால்களைக் கடந்து சென்ற MV SUN SEA கப்பலை கொள்ளமுடியும். அந்த அடையாளத்தின் தொடர்சியை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாகவே இந்த இணையத்தளம் தொடங்கியிருக்கிறது.

நாளாந்த செய்திகள் தொடக்கம் வரலாறுகள் வரை. தாய் மண்ணின் அடையாளங்களுடன் வெளிவரும் எங்கள் MVSUNSEA.COM என்ற இணையத்தளத்துடன் நீங்களும் இணைந்திருங்கள்.

நன்றி..

மேலும் செய்திகள்