ஆட்சியமைக்கப்பட்டுவரும் புதிய உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகங்கள் அமைக்கப்படும்போது, கட்சி மாறுபவர்கள் அல்லது கட்சி ஒழுக்கத்தை மீறுபவர்கள் தொடர்பில், நடவடிக்கை எடுக்க முடியாது எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் சட்டத்தில் அதற்கான இடமில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் குறித்த பொது ஆலோசனை நிகழ்வின்போது அவர் இதனை ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல இடங்களிலும் கட்சி மாறும் மற்றும் கட்சியின் ஒழுக்கத்தை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கே, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
Leave a comment