உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
8ஆவது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சர்வதேச சுகாதார உச்சி மாநாட்டில் விருந்தினராக பங்கேற்பதற்காகவே அவர் நேற்றையதினம் நாட்டுக்கு வருகை தந்தார்.
நேற்று காலை 9.40 மணியளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கியூ. ஆர். 660 விமானத்தின் ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவரை சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க வரவேற்றார்.
உலக சுகாதார நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு இன்று திங்கட்கிழமை முதல் நாளை மறுதினம் புதன்கிழமை வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.
தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த மாநாட்டுக்காக நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
Leave a comment