உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணை தொடர்பில் எந்தவித தகவல்களும் வெளியிடப்படக்கூடாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதால், அது தொடர்பான தகவல்களை வெளியிடுவது, விசாரணைக்கு பாதகமாக அமையும் என நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, குறித்த விசாரணை தொடர்பாக தகவல்களை வெளியிடுவது தொடர்பில் நாடாளுமன்றமும் உத்தரவுகளை வழங்க கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கோரியபோதே, நீதி அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தகவல்களை பகிரங்கப்படுத்துவதால், விசாரணைகள் சீர்குலையக்கூடும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment