இருள் சூழ்ந்த நேரத்தில் உண்மையான நண்பனை போல இலங்கைக்கு இந்தியா கைகொடுத்து உதவியதாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்துரைத்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியின் போது, இந்தியா அளித்த நிதியுதவி தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி, டெல்லியுள்ள இந்துக்கல்லூரி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது, குறித்த கல்லூரியில் தாம் கல்வி கற்ற காலத்தை நினைவூட்டிய பிரதமர், தம்மை மீண்டும் அங்கு வரவழைத்தமை தொடர்பில் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு வழங்கி வரும் கல்விக்கான ஆதரவு மற்றும் திறன் மேம்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
Leave a comment