முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர்த்திசையில் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றின் செலுத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இன்னொருவர் காயமடைந்து தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Leave a comment