Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

Share
Share

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனை கூறினார்.

அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை
என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வந்த கப்பலை, அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில்
104 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இராணுவ சார்பற்ற ஓர் இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள், அந்த அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுபவை அல்ல என்பதை வலியுறுத்தவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், அவை அமெரிக்கத் தாக்குதல்களுக்கு நேரடிப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்றும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...