Home தென்னிலங்கைச் செய்திகள் இலங்கையில் 2 மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையில் 2 மாதங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!

Share
default
Share

கடந்த ஏப்ரல், மே மாதங்களில்நாட்டுக்குள் கடத்தப்பட்ட  2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பெறுமதியான ஆயிரத்து 758 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் முன்னெடுக்கப்பட்ட 4 சோதனை நடவடிக்கைகளில் நெடுநாள் மீன்பிடி படகுகள் மூலம் கடத்தி வரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 25 சந்தேக நபர்களையும் அந்த பணியகம் கைது செய்துள்ளது.

2025ஆம் ஆண்டு இதுவரையிலான காலப்பகுதி வரையில் கடல் வழியாக நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடக பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஆயிரத்து 84 கோடி ரூபாய் என்றும் ஐஸ் போதைப்பொருளின் மதிப்பு ஆயிரத்து 216 கோடி ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...