இலங்கையிலிருந்து இந்தியாவுக்கான எரிசக்தி ஏற்றுமதி குறித்து அந்த நாட்டின் அமைச்சர்களுடன் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி கலந்துரையாடியுள்ளார்.
இந்தியா சென்றுள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி அந்த நாட்டின் எரிசக்தி
அமைச்சர் மனோகர் லால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, மின்சார கட்டமைப்பு இணைப்பு, இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் போன்ற இருதரப்பு திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
Leave a comment