Home தாயகச் செய்திகள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறியதமிழக மீனவர்கள் எழுவர் கைது!

Share
Share

தமிழக மீனவர்கள் 7 பேர் யாழ். கடற்பரப்பில் ஒரு படகுடன் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே மேற்படி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், இராமேஸ்வரம் பகுதியில் இருந்து இன்று அதிகாலை TN/10/MM/0746 என்ற இலக்கம் கொண்ட விசைப்படகில் பயணித்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் நீரியல் வளத்துறையினர் ஊடாக நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24 படகுகளுடன் 181 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கையைப் பிரிக்கும் முயற்சி தொடர்கின்றது- இந்தியாவை சாடுகிறார் தம்மரத்ன தேரர்!

இலங்கையைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்கின்றது என்று பேராசிரியர் இந்துராகரே தம்மரத்ன தேரர்...

போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் இல்லை – சிறீதரன் எம்.பி. விசனம்!

“இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர்...

கோண்டாவிலில் விபத்து! ஒருவர் மரணம்!

உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்தார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை...

கூமாங்குளத்தில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைக்கு நீதிபதி உத்தரவு!

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் நேற்றிரவு உயிரிழந்த பொதுமகனின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு நீதவான்...