அண்மைய தீவிர வானிலை பேரழிவைத் தொடர்ந்து மீட்பு மற்றும் மறுகட்டமைப்புக்கு
ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு முழு ஆதரவு கிடைக்கும் என்று இலங்கைக்கான ஐ. நா. வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்துடனான சந்திப்பின் போது அவர் இந்த உறுதி மொழியை அளித்தார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உடனடி நிவாரணத்தை ஆதரிப்பதற்காக ஐ.நா. தனது
அவசரகால மீட்பு நிதியத்தின் கீழ் முதற்கட்டமாக 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முடிவு செய்துள்ளதாக ஆண்ட்ரூ கூறினார்.
கூட்டத்தின்போது இந்தத் தொகை அமைச்சர் ஹேரத்திடம் அடையாளமாக ஒப்படைக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்பு, வீட்டுவசதி, குடிதண்ணீர், கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் மீன்
பிடித் துறைகளில் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி கவனம் செலுத்தும் என ஐ. நா. தெரிவித்துள்ளது.
தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக ஐ.
நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்திலி ருந்து ஐவர் கொண்ட குழு ஏற்கனவே இலங் கைக்கு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்புடைய அனைத்து ஒருங்கிணைப்புகளுக்காகவும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையத்துடன் நெருக்கமாக பணியாற்ற ஐ.நா. எதிர்பார்க்கிறது.
இந்தப் பேரிடர் நாட்டின் மக்கள் தொகை, பொருளாதாரம், விவசாயத் துறை மற்றும் அத்தியாவசிய உள்கட்டமைப்பை கடுமையாகப் பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் ஹேரத், தேசிய மீட்பு முயற்சிகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இலங்கையின் மறுகட்டமைப்பு திட்டத்திற்கு பங்களிக்கும் சர்வதேச பங்காளிகளின் ஆதரவை எளிதாக்குவதற்காக, நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் உள்ள அதன் அலுவலகங்களுடன் ஐ.நா தொடர்ந்து பணியாற்றும் என்று வதிவிடப் பிரதிநிதி குறிப்பிட்டார்.
Leave a comment