Home தென்னிலங்கைச் செய்திகள் இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: மூன்று சந்தேகநபர்கள் சிக்கினார்கள்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு: மூன்று சந்தேகநபர்கள் சிக்கினார்கள்!

Share
Share

இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த வீதிப் பகுதியில் 24.06.2025 அன்று இடம்பெற்ற இரட்டைக் கொலை துப்பாக்கிச்சூடு தொடர்பாக  தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டபோதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் என்பனவும்  மீட்கப்பட்டுள்ளன என்றும்  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...