Home தாயகச் செய்திகள் இனிய பாரதியின் சகா ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இனிய பாரதியின் சகா ஒருவர் கைது!

Share
Share

இனிய பாரதியின் சகா ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொப்பிமனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இன்று(27) மாலை அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

முன்னதாக, கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். 

இந்த கைதையடுத்து இனிய பாரதியின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி கல்முனை நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், நேற்று பிற்பகல் இனிய பாரதியின் அலுவலகம் முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 

அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவையும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...