Home தென்னிலங்கைச் செய்திகள் இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

Share
Share

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்தத் தகவலை இன்று காலை உறுதிப்படுத்தியுள்ளார்.

கெஹெல்பத்தார பத்மே, கொமாண்டோ சலிந்த, பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார்.

இலங்கைப் பொலிஸார் மற்றும் சர்வதேசப் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பிரதான குற்றவாளியான கெஹெல்பத்தார பத்மே, மலேசியாவில் இருந்து தப்பிச் சென்று இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த 6 பேர் மீதும் கொலை, போதைப்பொருள் கடத்தல், கொள்ளை உள்ளிட்ட பல தீவிர குற்றங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் செயல்களை இவர்கள் வெளிநாடுகளில் பதுங்கி இருந்து வழிநடத்தியுள்ளனர் எனக் கடந்த காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவர்களில் பெண் தவிர ஏனைய ஐவரும் சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்களையும் ஓரிரு நாட்களில் இலங்கைக்குக் கொண்டு வருவதற்குரிய பேச்சு இடம்பெற்று வருகின்றது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அவர்கள் இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சந்நிதியில் இன்று ஒரே நேரத்தில் 111 ஜோடிகளுக்குத் திருமணம் – சிங்கப்பூர் தம்பதியினர் செய்து வைத்தனர்!

யாழ். வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் முதன்முறையாக ஒரே நேரத்தில் இன்று 111 ஜோடிகளுக்குத் திருமணம்...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர்...