இந்திய மீனவர்களின் சட்டவிரோத அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி நேற்று யாழ்.நகரில் போராட்டம் நடத்தப்பட்டது.
நேற்று காலை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த போராட்டம் பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தின் முன்பாக ஆரம்பமாகி யாழ்ப்பாண மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றது.
இதன் போது, மாவட்ட அரசாங்க அதிபரிடம், மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய துணைத் தூதரம், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆதியவற்றிலும், மீனவர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்றைய போராட்டத்தில் பங்கேற்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபரை சந்தித்து, வட பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை, உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும் என வலியுறுத்தினார்.
Leave a comment