Home தாயகச் செய்திகள் இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு கடற்படையினரிடம் சிக்கியது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு கடற்படையினரிடம் சிக்கியது!

Share
Share

இந்தியாவில் இருந்து இலங்கையர் ஒருவரை ஏற்றி வந்த படகு மன்னார் கடற்பரப்பில் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது. இதன்போது அந்தப் படகில் இருந்த இலங்கையர் உட்பட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இராமேஸ்வர் தனுஸ்கோடியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரும், இலங்கையையின் நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவருமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பயணம் தொடர்பில் பெரும் சந்தேகம் காணப்படுவதால் அவர்களைக் கடற்படையினர் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

விசாரணையின் பின்னர் இன்று மன்னார் பொலிஸார் ஊடாக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

கிவுல் ஓயா திட்டம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறார் அமைச்சர் சந்திரசேகர்!

கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம்...

தேசிய மருத்துவமனையாகிறது யாழ்.போதனா!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்துதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தற்போதைய...