யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, ஆழியவளையில் இருந்து இந்தியாவுக்குச் சட்டவிரோதமாக படகில் சென்ற இருவர் கடலூர் கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவில் இருந்து கஞ்சாவைக் கடத்தி வரும் நோக்கில் படகில் சென்றுள்ளனர் என்று இந்தியப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் கஞ்சா கடத்தப்படுகின்றது என்று இந்தியப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் மேற்கொண்ட சோதனையின்போது கடலூர் கடற்கரையில் மூவர் கைது செய்யப்பட்டதுடன் 300 கிலோ கஞ்சாவும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
கைது செய்த மூவரிடமும் இந்தியப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் படகுக்கு வழங்கவே கஞ்சாவை மறைத்து வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வழங்கிய தகவலின் அடிப்படையில் கடலூர் கடற்கரையில் மறைந்திருந்த இந்தியப் பொலிஸார் யாழ். ஆழியவளையில் இருந்து சென்ற படகை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன்போது படகில் இருந்த இரு இலங்கைரையும் இந்தியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Leave a comment