Home தென்னிலங்கைச் செய்திகள் இணைய வழியில் மோசடி; பொலிஸார் நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

இணைய வழியில் மோசடி; பொலிஸார் நடவடிக்கை!

Share
Share

இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்ட இலங்கை பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

“இணையம் வழியாக நடைபெறும் மோசடிச் செயல்கள், குறிப்பாக டெலிகிராம் (Telegram), வட்ஸ்அப் (WhatsApp) போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடக குழுக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தினசரி பதிவாகின்றன.

இதில், மோசடிக்காரர்கள் தனிநபர்களை ஏமாற்றி, அவர்களது பயனர் பெயர், கடவுச்சொற்கள் (User Name/Password), QR குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.

மேலும், இணையவழியான வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி, பல்வேறு கணக்குகளுக்குப் பணத்தை வைப்பிலிடச் செய்து மோசடிகள் நடைபெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இணையத்தைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற மோசடிகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

நீங்கள் பயன்படுத்தும் சமூக ஊடகக் கணக்குகளில் (டெலிகிராம்/வட்ஸ்அப் அல்லது வேறு) அறியப்படாத நபர்கள் மற்றும் அறியப்படாத குழுக்கள் மூலம் வழங்கப்படும் வருமான வழிகள் தொடர்பான மோசடியான தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் இருப்பது.

அறியப்படாத நபர்கள் மற்றும் சமூக ஊடகக் குழுக்கள் வெளியிடும் இணைய இணைப்புகள் (Links) மற்றும் ஸ்கேன் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.

இணைய வெளியிலுள்ள அறியப்படாத நபர்களின் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றுவது, அவர்களுடன் வங்கித் தகவல்களைப் பகிர்வது, உங்கள் வங்கிக் கணக்கை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிப்பது ஆகியவற்றைத் தவிர்த்தல்.

கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள், OTP குறியீடுகள் போன்ற இரகசியத் தகவல்களை வெளி நபர்களுடன் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது.

அறியப்படாத நபர்கள் வழங்கும் கைபேசி எப்ளிகேஷன்களை (Mobile Applications) நிறுவும்போதும் மற்றும் இணைய இணைப்புகளைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கவனமாக இருப்பதுடன், இலத்திரனியல் சாதனத்தின் இருப்பிட அனுமதியைக் (Location Permission) கொடுப்பதை தவிர்த்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...