இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆலையடிவேம்பில் நடைபெற்றது.
கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ச.குகதாசன், இராசமாணிக்கம் சாணக்கியன், கவீந்திரன் கோடீஸ்வரன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜெனிவாக் கூட்டத் தொடரில் இலங்கை மீது கொண்டுவரப்படவுள்ள பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பிரேரணை வரைபு தொடர்பில் இதன்போது கலந்துரையாடல் நடைபெற்றது.
கட்சி சார்ந்த பல பிரச்சினைகள், மாவட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டன.







Leave a comment