Home தென்னிலங்கைச் செய்திகள் ஆலயங்களில் தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டுவந்த பெண்கள் எண்மர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஆலயங்களில் தங்க நகைத் திருட்டில் ஈடுபட்டுவந்த பெண்கள் எண்மர் கைது!

Share
Share

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களில் தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்கள் எண்மர் கொண்ட குழுவை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான பெண்களில் இருவர் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

கைதான குழு நல்லூர் கந்தசுவாமி ஆலயம், மடு மாதா தேவாலயத் திருவிழாக்களை இலக்கு வைத்தே வடக்குக்கு வந்துள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆலயத் திருவிழாக்களில் பொதுவாக வடக்கில் பெண்கள் அதிகளவில் தங்க நகைகளை அணிந்து வருவது வழமை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே மேற்படி குழு நகைக் களவில் ஈடுபட்டது என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், மடு மாதா தேவாலயத் திருவிழாவில் 10 இற்கும் மேற்பட்ட
பெண்களின் தங்க நகைகள் களவாடப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 75 இலட்சம் ரூபாயிலும் அதிகமாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆண்கள் இருவரும் பெண்கள் நால்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் கைதான பெண்கள் குழுவுக்கும் மடுவில் கைதான பெண்கள் குழுவுக்கும் தொடர்பு உள்ளது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இந்தியப் பெண்களுடன் கைதானவர்கள் குறி சொல்லும்தொழிலில் ஈடுபடுபவர்கள். அவர்கள் சிலாபம், தம்புதேகம பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!

சுமார் 10 கிலோகிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.  இதற்கு அமைய...

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலம் நிறைவேறியது!

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 150 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது,...