தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி தனது பிள்ளைகளை அரவணைத்து பாதுகாக்க தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும்’, என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
ஆனந்த சுதாகரின் மனைவி ஏற்கனவே உயிரிழந்த நிலையில் அவரின் பிள்ளைகள் இருவரும் பேர்த்தியாரின் (தாயாரின் தாய்) பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில், அவர்களின் பேர்த்தியாரான தேவதாஸ் கமலா (வயது 75) நோயால் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் காலமானார்.
‘இதனால், ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் மீண்டும் அநாதரவாகியுள்ளனர். இந்த நிலையிலேயே ‘சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால் ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற பள்ளிப்பிஞ்சுகளின் தந்தையான, அரசியல் கைதி ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி, அந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம்
வழிசமைக்க வேண்டும்’, என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Leave a comment