Home தென்னிலங்கைச் செய்திகள் ஆட்சி மாற்றம் திடீரென நடக்கலாம் – மொட்டுவின் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சொல்கின்றார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆட்சி மாற்றம் திடீரென நடக்கலாம் – மொட்டுவின் பேச்சாளர் சஞ்சீவ எதிரிமான்ன சொல்கின்றார்!

Share
Share

“ஆட்சி மாற்றத்துக்காக 2029 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னர்கூட ஜனநாயக வழியில் அது நடக்கலாம். அடுத்த ஜனாதிபதி நாமல் ராஜபக்ஷ என்பது சமூகத்தின் கருத்தாகும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. அந்தக் கட்சியின் பேச்சாளரான சஞ்சீவ எதிரிமான்ன இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-

“அடுத்த ஜனாதிபதி யார் என்ற கருத்தாடல் சமூகத்தில் உருவாகியுள்ளது. அநுரதான் அடுத்த ஜனாதிபதி என்றோ அல்லது பிரதான எதிரணி ஆட்சியைக் கைப்பற்றும் என்றோ சமூகத்தில் கருத்துக்கள் இல்லை. நாமலைப் பற்றித்தான் தேடப்படுகின்றது.

நாமல்தான் அடுத்த ஜனாதிபதி என்ற கருத்தை நாம் உருவாக்கவில்லை. அது சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. இயற்கையாகவேதான் அந்தக் கருத்தாடல் உருவாகியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்பது உச்சபட்ச கால எல்லையாகும். எனினும், அதற்கு முன்னர் ஆட்சியை மாற்றலாம். இலங்கையில் இதற்கு முன்னர் எப்படி நடந்தும் உள்ளது.

பதவிக் காலம் முடியும் வரை தேசிய மக்கள் சக்தி அரசு பயணிக்கும் என்பதற்குரிய அறிகுறிகள் இல்லை. அரசமைப்பு ரீதியாகக் கூட ஆட்சி மாற்றம் இடம்பெறலாம். ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் நிகழக்கூடும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சட்டமூலம் நிறைவேறியதும் உத்தியோகபூர்வத்திலிருந்து மஹிந்த வெளியேறுவார் – நாமல் தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச...

செம்மணி புதைகுழி விவகாரத்தை இராணுவத்தினர் மீது சுமத்த முயற்சி – சரத் வீரசேகர கவலை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும்...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஏழு பேர் பணி இடைநிறுத்தம்!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்ஏழு பேர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார...

சந்திரசேன பிணையில் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவைப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான்...