2015 ஆம் ஆண்டு மைத்திரி-ரணில் அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜூன் மகேந்திரன், பிணை முறி மோசடி குற்றச்சாட்டில்விரைவில் கைது செய்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள மகேந்திரன், முறைப்படி கைது செய்யப்பட்டு சட்ட
நடவக்கை எடுப்பதற்கு உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சென்ற ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தாக்கல் செய்த முறைப்பாட்டில், செப்ரெம்பர் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
ஆனாலும் அர்ஜூன் மகேந்திரன் இதுவரை முன்னிலையாகவில்லை. இதனால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச பிடியாணையின் பிரகாரம் அவரை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Leave a comment