அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை – சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
அதேவேளை, சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து 625 கிலோகிராம் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் 6 நவீன துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி – 56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment