Home தாயகச் செய்திகள் அம்பலமாகிறது திருகோணமலை சித்திரவதை முகாம்! வெளிநாட்டவர்களும் அனுபவித்தனர்!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அம்பலமாகிறது திருகோணமலை சித்திரவதை முகாம்! வெளிநாட்டவர்களும் அனுபவித்தனர்!

Share
Share

இந்நிலையில், இது குறித்த விசாரணைகளில் இதுவரை அலவ்வ பொலிஸ் நிலையத்தின் அப்போதைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாரும், கன்சைட் வதை முகாமின் பொறுப்பாளராக இருந்த கொமாண்டர் ரணசிங்க உள்ளிட்ட 5 கடற்படையினரும் கைது செய்யப்பட்ட நிலையிலேயே கடந்த ஜூலை 28 ஆம் திகதி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டார்.

சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளின் போது 2010 ஜூலை 23 ஆம் திகதி காணாமல் போன கேகாலை சாந்த அதிலிருந்து 6 மாதங்கள் வரை திருகோணமலை ‘கன்சைட்’ நிலத்தடி சித்திரவதை முகாமில் இருந்தமை சாட்சிகளுடன் வெளிப்படுத்தப்ப்ட்டது.

அதன்படியே, கடந்த 2010 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013 வரை கடற்படை உளவுத்துறை பணிப்பாளராக கடமையாற்றிய முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவிடம் சி.ஐ.டி.யினர் விசாரணைகளை நடாத்தியது. இதன்போது தான் 2010 ஒக்டோபர் முதலாம் திகதி உளவுத்துறை பணிப்பாளராக கடமையேற்ற பின்னர், அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிடம் பெற்றுக்கொண்ட எழுத்து மூல அனுமதிக்கு அமைய ‘கன்சைட்’ முகாமை பார்வையிட சென்ற‌தாக முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி.யினரின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு 40 முதல் 60 வரையிலானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கன்சைட்’ என்பதை பதிவு செய்யப்பட்ட சிறைச்சாலை அல்ல என்பதையும், அது சட்ட விரோத தடுப்பு மையம் என்பதையும் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன ஏற்றுக்கொன்டதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கும் அறிவித்துள்ளனர். அதன்படியே, முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன தண்டனை சட்டக் கோவையின் 356,141,296,32,47 ஆகிய பிரிவின் கீழ் கடத்தல் மற்றும் சிறை வைப்பு, சட்டவிரோத கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருத்தமை, கொலை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட தண்டனைக் குரிய குற்றங்களை புரிந்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த சட்ட விரோத செயலை அப்போதைய கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க அறிந்திருந்ததாக சாட்சியங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில், அவரையும் அப்போது கிழக்கு பிராந்திய கடற்படை தளபதியாக இருந்த கொலம்பகேவையும் விசாரணை வலயத்துக்குள் கொண்டு வந்து சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய, கன்சைட் முகாமை பார்வையிட தான் என்ர போது, அங்கு விஷேட உளவுப் பிரிவு என ஒரு பிரிவு செயற்பட்டதாகவும், அது கடற்படையின் உளவுத் துறையால் வழிநடத்தப்பட்ட பிரிவு அல்ல என்பதை தான் கண்டறிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விசேட பிரிவுக்கு, உளவுத் துறையுடன் தொடர்புபடாத கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க கட்டளைகளை வழங்கியுள்ளதாகவும், அதில் ரணசிங்க, பொடி குமார, லொகு குமார, ரத்நாயக்க, சந்தமாலி, கௌசல்யா ஆகிய கடற்படை வீர வீராங்கனைகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி பின்னர் தான் அந்த விசேட உளவுத்துறை பிரிவை கலைத்ததாகவும் நிஷாந்த உலுகேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடற்படை விசேட உளவுத்துறை தொடர்பிலும் சி.ஐ.டி. அவதானம் செலுத்தி விசாரித்து வருகின்றது. கடந்த ஜூலை 30 ஆம் திகதி நிஷாந்த உலுகேதென்னவை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், முன் வைக்கப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அடையாள அணிவகுப்பை இரத்துச் செய்தது. இந்த விவகாரத்தில், விடுதலை புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு பொறுப்பாளராக இருந்த பாரதி, கடற்படையின் விஜேகோன் உள்ளிட்ட சாட்சியாளர்கள் அளித்துள்ள சாட்சியங்களின் பிரகாரம் இரு வெளிநாட்டவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை உறுதியாகியுள்ளது. அது குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதனிடையே, இந்த விவகாரத்தில் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை குறித்த விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் இளங்கசிங்க, உப பொலிஸ் பரிசோதகர் நாமல், சார்ஜன் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரை கடற்படை உளவுப் பிரிவு அச்சுறுத்தும் வண்ணம் பின் தொடர்ந்த்துள்ளமை குறித்து பொல்கஹவல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கன்சைட்’ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் குறித்து கடற்படை வீரர் விஜேகோனின் சாட்சியத்தை மையபப்டுத்தி, பருத்தித் துறையை சேர்ந்த்த கரன், சரீதா எனும் கணவன் மனைவியிடம் சாட்சியம் பெற அவர்களை தேடி சி.ஐ.டி. குழு சென்ற போது கடற்படை உளவுப் பிரிவினர் அவர்களை பின் தொடர்ந்த்துள்ளனர். பருத்தித் துறையை சேர்ந்த குறித்த கணவன் மனைவி தற்போது சுவிட்சர்லாந்தில் வசிப்பது தெரியவரவே, சி.ஐ.டி.யினர் அவர்ள‌து வீட்டாரிடம் தகவல் பெற்று தொலைபேசியில் தொடர்புகொள்ள நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பின்னர் அவ்வீட்டுக்கு கடற்படையினர் சென்று விசாரித்துள்ளனர்.

இது குறித்து சி.ஐ.டி.யினர் தகவல் தெரிந்த பின்னர், சி.ஐ.டி.யினரை பிந்தொடர்ந்த கடற்படையினரை சி.ஐ.டி.க்கு அழைத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர். இதன்போது காங்கேசன்துறை பகுதிக்கு பொறுப்பான கடற்படை உளவுத் துறை பொறுப்பதிகாரி லெப்டினன் கமாண்டர் ரூபசிங்க என்பவரே சி.ஐ.டி.யை பிந்தொடர உத்டவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து நீதிமன்றுக்கும் அறிவித்த விசாரணை அதிகாரிகள் ரூபசிங்கவை அழைத்து விசாரித்துள்ளனர். இதன்போது தனது முடிவுக்கு அமையவே தான் அவ்வுத்தர்வை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கடந்த ஜூலை 30 ஆம் திகதி பொல்கஹவல நீதிவான் நீதிமன்றில் நிஷாந்த உலுகேதென்னவுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்த போது, குறித்த ரூபசிங்க எனும் லெப்டினன் கொமாண்டரும் அங்கு இருந்த நிலையில், இது குறித்து சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கும் அறிவித்துள்ளனர். இவ்வழக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி மீள விசாரணைக்கு வரவுள்ள நிலையில் அதுவரை முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன விளக்கமரியலில் வைக்கப்ப்ட்டுள்ளார். அத்துடன் மேலதிக விசாரணை முன்னேற்றத்தை எதிர்வரும் 24 ஆம் திகதி சமர்ப்பிக்க நீதிவான் சி.ஐ.டி.யினருக்கு அறிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மட்டக்களப்பில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள தேவாலயத்திற்கு அருகில் பொதுமகன் ஒருவர் இன்று (03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....

இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்; எதிர்கொள்ள இலங்கை அரசாங்கம் நடவடிக்கை!

ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத் தொடரில் பிரித்தானியா, கனடா, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும்...

செம்மணியில் சான்றுப் பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பிற சான்றுப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காணும்...