வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் தமது மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குமாறு, இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளுடன் நெருங்கிய தரப்பைக் கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை அரசாங்கம் இந்த யோசனைக்கு தமது முழுமையான ஒப்புதலை வழங்கவில்லை.
எதிர்காலத்தில் இது போன்ற விடயங்களை படிப்படியாகக் கருத்தில் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இலங்கைக்கான அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதி 368.2 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது.
எனினும், இலங்கையிலிருந்து பொருட்கள் இறக்குமதி 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 3 பில்லியன் டொலர்களாக அமைந்திருந்தது.
எனவே, இலங்கையுடனான அமெரிக்கப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 2024 இல் 2.6 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது.
Leave a comment