நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால், அதிவேக நெடுஞ்சாலையில் மாத்திரம் சுமார் 190 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி (Wimal Kandambi) இதனைத் தெரிவித்துள்ளார்.
வெள்ளம், மண்சரிவு மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பேரழிவுகளால் அதிவேக நெடுஞ்சாலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை மின்சார சபையும் தொடர்புடைய சேதங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் நீர்ப்பாசன முறையும் பாரிய சேதங்களை சந்தித்துள்ளதாகவும் அவை தற்போது படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருவதாகவும் நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், துறைகள் வாரியாக சேதம் மற்றும் மீள்கட்டமைப்புக்கான நிதித் தேவைகள் குறித்த விரிவான மதிப்பீட்டைத் தயாரிக்க அரசாங்கம் உலக வங்கியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Leave a comment