Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் – உதய கம்மன்பில!

Share
Share

“அடுத்த வருடம் இதே காலப் பகுதியில் பொருளாதார நெருக்கடி ஏற்படும். எனவே, எதிரணிகள் ஓரணியில் திரண்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்ள முடியும். அநுர தலைமையிலான இந்த ஆட்சியை மாற்றுவதற்குரிய தமது கடப்பாட்டை நிறைவேற்ற எதிரணிகள் முன்வரவேண்டும்.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“2028 இல் இந்நாடு கடன் செலுத்தும் நாடாக மாறவேண்டுமெனில் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 2024 இல் நாம் இதனை செய்தோம். எனினும், தற்போது பொருளாதார வளச்சி வீதமானது 3.5 ஆகவும், அடுத்த வருடம் 3.1. ஆகவும் இருக்குமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைய முடியாமல் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும்.

இந்நிலையில் எதிரணிகள் ஒன்றுபட்டால் அடுத்த வருடம் அதே காலப் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
எதிரணிகள் ஓரணியில் திரண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

அடுத்த ஜனாதிபதி யார் என்ற விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, நாடாளுமன்றத் தேர்தலை வென்றெடுக்க ஒன்றுபட வேண்டும்.

ஜனாதிபதி யாரென்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இந்த ஆட்சியைக்  கவிழ்க்கும் பொறுப்பை எதிரணிகள் ஏற்க வேண்டும். எதிரணியை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாட்டில் வாழ்வோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் விரிவுபடுத்தப்பட்டது!

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...