தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – கரடிப்புலவு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நாகையா நாகையா நாகராஜா (வயது 41) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூராய்வு பரிசோதனை அறிக்கையில், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் ஏற்பட்ட அதிக இரதப் போக்கால் மரணம் சம்பவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த நபர் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.
ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment