பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீளவும் நிர்மாணிப்பதற்காக நேற்று புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
சர்வமத தலைவர்களின் ஆசியுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தொழிற்சாலைக்கான பெயர் பலகை திறப்பும் அடிக்கல் நாட்டலும் அந்தத் தொழிற்சாலையின் முன்னாள்
பணியாளர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
தொழிற்சாலையின் நிர்மாண பணிக்கு அரசாங்கம் முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை 30 மாதங்களில் நிறைவுறுத்த எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 630 கோடி ரூபாய் முதலீட்டில் அரச – தனியார் கூட்டுப்பங்காண்மை மூலம் இந்தத் தொழிற்சாலை இயக்கப்படும் என்று இங்கு உரையாற்றிய வடக்கு ஆளுநர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு ஆளுநர் நா. வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், அமைச்சுகளின் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு. முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ. வேழமாலிகிதன், முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் தலைவர்கள், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
Leave a comment