Home தாயகச் செய்திகள் கனகராயன்குளம் பகுதியில் விபத்து! யாழ்.இளைஞர் மரணம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

கனகராயன்குளம் பகுதியில் விபத்து! யாழ்.இளைஞர் மரணம்!

Share
Share

வவுனியா மாவட்டம் – கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று வெள் ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச்சென்ற லொறி எதிர் திசையில்
வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த ஒருவரும் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், முச்சக்கர வண்டியின் பின்னால் பயணித்த பயணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

யாழில் எலிக்காய்ச்சலினால் இருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க...

மாவிலாறு உடைப்பு; 309 பேரை மீட்டது கடற்படை!

திருகோணமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) மாவிலாறு அணைக்கட்டு தடுப்பு பகுதி உடைந்ததால் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

வெள்ளத்தில் மூழ்கிய மூதூர்! பலத்த நெருக்கடிக்குள் மக்கள்!

நாட்டில் பெய்துவரும் அசாதாரண கனமழையின் தாக்கத்தால் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று...

முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை! ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறினர்!

இயற்கைப் பேரிடரால் முல்லைத்தீவில் இருவரைக் காணவில்லை. 24 முகாம்களில் 2ஆயிரத்து 80 பேர் தஞ்சம் அடைந்துள்ள...