முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச் சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பஸில் ராஜபக்ஷ 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 103 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் சக்தி அமைப்பின் தலைவர் காமந்த துஷார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த முறைப்பாடுக்கு அமையவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரச வளங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டன என்று கூறப்படும் விவரங்கள், முன்னாள்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment