இறுதிப்போரின்போது ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்குரிய சாட்சி இருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கையில் இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களை இணைத்துக் கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது எழுப்பட்ட
கேள்விக்கு பதிலளித்த பொன்சேகா, ‘சாட்சி இருந்தால், முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், இடம், சம்பவம், திகதி என்பன தெரிந்திருந்தால் நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
ஆனால் போலி தகவல்களை கருத்திக்கொள்ள வேண்டியதில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் தமிழ் அரசியல்வாதிகளால் போலி கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஒட்டு மொத்த இராணுவமும் தவறிழைத்தது என சிலர் துள்ளிக் குதிக்கின்றனர். இப்படியான கருத்துகள் பற்றி விசாரிக்க முடியாது அல்லவா? விசாரணை நடத்துவதாக இருந்தால் ஏதேனும் மூலம் அவசியம்.’ – எனவும் குறிப்பிட்டார்.
‘விசாரணை நடத்தப்பட்டாலும் அது தேசிய விசாரணையாகவே இருக்கவேண்டும். எனினும், வெளிநாட்டில் இருந்தும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வைத்திருப்பது நல்லது. அப்போது வெளிப்படைத்தன்மை இருக்
கும். ‘ – எனவும் பொன்சேகா மேலும் குறிப்பிட்டார்.
Leave a comment