முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
குறித்த விசாரணை தொடர்பாக கைது செய்யப்படுவதை தவிர்க்க முன் பிணை கோரி மனுஷ நாணயக்கார இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
Leave a comment