Home தாயகச் செய்திகள் சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட சடலம்; உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியது!

Share
Share

யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண் ஒருவரது உடலம் சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) மீட்கப்பட்டது. 

அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது. 

இதன்போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது. 

அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார். 

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தமை உடற்கூறாய்வில் தெரிய வந்துள்ளது. 

குறித்த பெண் வீட்டை விட்டுப் புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். ஆனால் அவரது உடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை. 

அவர் வீட்டை விட்டுப் புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 

எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வெகுவிரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் எனக் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனு தள்ளுபடி!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி...

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவத் தயார் – சீனப் பிரதமர்!

இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயார் என சீனா உறுதியளித்துள்ளது. மக்கள் சீனக் குடியரசிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும்...

மின் கட்டணத்தில் மாற்றமில்லை!

மின்சார கட்டணத்தில் எந்தவித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெறும்...

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் சிக்கினார்!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலைச்...