யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை
பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்துள்ளார்.
நாயன்மார்கட்டு பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவரே உயிரிழந்தவர் ஆவார்.
இந்த முதியவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கடந்த 5ஆம் திகதி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது கனரக வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவத்தில் கணவனும் மனைவியும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்
கப்பட்டனர். அவர்களில் கணவரே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Leave a comment