இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனு
மதி அளிக்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
விவசாய நிலங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை வகுக்குமாறு இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தலும் ஜனாதிபதி வழங்கினார்.
Leave a comment