Home தென்னிலங்கைச் செய்திகள் போதைப்பொருள் பாவனை; கடந்த ஒரு மாதத்தில் மூவாயிரம் பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் பாவனை; கடந்த ஒரு மாதத்தில் மூவாயிரம் பேர் கைது!

Share
Share

இலங்கையில் கடந்த மாதம் (ஆகஸ்ட்) 29 ஆம் திகதி முதல் இந்த மாதம் (செப்டெம்பர்) 4 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 3 ஆயிரத்து 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச்  சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 1011 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 972 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  28 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 913 பேரும், கஞ்சா செடிகளுடன் 29 பேரும், போதை மாத்திரைகளுடன் 59 பேரும், சட்டவிரோத சிகரட்டுகளுடன் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒரு கிலோ 907 கிராம் 606 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், ஒரு கிலோ 856 கிராம் 529 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், ஒரு கிலோ 342 கிராம் 62 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருளும், ஆயிரத்து 59 கிலோ 899 கிராம் 634 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 48 ஆயிரத்து 925 கஞ்சா செடிகளும், 6 ஆயிரத்து 733 போதை மாத்திரைகளும், 4 ஆயிரத்து 53 சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பேரிடர்; 159 பேர் பலி – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் கடந்த 16 ஆம்திகதி முதல் இன்று இரவு 8...

இலங்கையில் 56 உயிர்கள் இயற்கைச் சீற்றத்தால் பலி!

இலங்கையை மையங்கொண்டு நகர்ந்துவரும் புயல், மழை உட்பட்ட அதிதீவிர வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக...

இலங்கையில் இயற்கை அனர்த்தம்; 31 பேர் பலி! அபாயம் தொடர்கிறது!

சீரற்ற வானிலையினால், கடந்த 17 ஆம் திகதி முதல் இன்று வரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக...

ரணில் விவகாரம்; பிரித்தானியாவில் விசாரணை மேற்கொண்ட குழு நாடு திரும்புகிறது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில்கலந்துகொள்வதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தபோது,...