Home தாயகச் செய்திகள் மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழுமாறு வலியுறுத்தி முறைப்பாடு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழுமாறு வலியுறுத்தி முறைப்பாடு!

Share
Share

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் கிணறுகளை அகழ்ந்து, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா, வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலா தன் ஆகியோரால் வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப் பினரான திருமதி அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சி யின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருநாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இரு வேறு முறைப்பாடுகளை நேற்று ஊர்காவற் றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

35 வருடங்களுக்கு முன்னர் ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின்போது மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும் யுவதிகளும் காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும் சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.

அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன. இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்தவர்கள், குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...

வங்கிகள் மூலம் மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை!

வங்கிகள் மூலம் பரிசுகள் வழங்கப்படுவதாக, தற்போது சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக...

33 அரச நிறுவனங்களை மூடுகிறது அரசாங்கம்?

நட்டமடைந்துவருவதாக 33 அரச நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளபோதும் அந்த நிறுவனங்களின் பெயர்களை இதுவரை வெளியிடவில்லை....