Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ரணில்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ரணில்!

Share
Share

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இண்டனுக்குத் தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு வீட்டில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவரைக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை வைத்தியர்கள் தீர்மானித்தனர்.

அதற்கமைய சிறைச்சாலை தலைமையகத்தின் அனுமதியுடன் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இன்று பிற்பகல் மாற்றப்பட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கல்முனை மாநகர சபை ஊழியர் இ.போ.ச. பஸ் மோதி உயிரிழப்பு!

கல்முனை மாநகர சபையில் காவலாளியாகக் கடமையாற்றும் டேவிட் பாஸ்கரன் (வயது 56) வீதி விபத்தில் சிக்கி...

அரசியல் ஆதாயங்களுக்காக ஒன்றிணையோம் – ரணிலைச் சுகம் விசாரித்த பின்னர் சஜித் தெரிவிப்பு!

“தனிப்பட்ட குழுக்களையோ அல்லது அரசியல் நோக்கங்களையோ இலக்காகாக் கொண்டல்லாமல், நாட்டின் பிரச்சினைகளுக்குப் பதில்களைக் காண்பதற்கே எதிர்க்கட்சிகளின்...

ரணிலுக்கு இருதய அறுவைச் சிகிச்சை உடனடியாகச் செய்யப்பட வேண்டும் – வைத்தியர் ருக்‌ஷன் பெல்லன தெரிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு...

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது – பொலிஸ் மா அதிபர்!

புதிய அரசாங்கம் வந்ததும் பாதாள உலக கும்பலின் சக்தி பலவீனமடைந்தது என பொலிஸ் மா அதிபர்...